பிரபஞ்சன் அவர்கள் தமிழ் மொழியின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை,நாவல்சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளிலும் சாதனை முத்திரை பதித்தவர். தமிழக அரசும்புதுச்சேரி அரசும் இவரைச் சிறந்த எழுத்தாளராக கெளரவித்திருக்கின்றன. இந்திய இலக்கியத்தின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறந்த எழுத்தாளர்.

இந்த புத்தகத்தின் பதிப்புரையில் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள செய்தி: "தினமலர் வாரமலரில் தொடராக வெளிவந்த போதே பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் நெஞ்சை கொள்ளை கொண்ட நாவல் என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது."

நான் சமீபத்தில் வாசித்த இந்த கதை மிகவும் வித்தியாசமான கதையாக இருந்தது. கதைக்குள் போவோமா?

முன்னுரையில் பிரபஞ்சன் அவர்கள் இந்தக் கதையை பற்றி சொல்கிறார். ”புகழ்பெற்ற ஒரு சினிமா இயக்குநர் காணாமல் போவதில் தொடங்குகிறது இந்தத் தொடர்கதை. அவனைத் தேடிப் புறப்படுகிறாள் இளம் பத்திரிக்கையாளர் ஒருத்தி. அவன் உலகமும்,உறவும்அவள் தேடலும் தான் கதை”.

பிரபல பத்திரிக்கையில் ரிப்போர்ட்டராக பணிபுரியும் செல்விபத்திரிக்கை ஆசிரியரின் வேண்டுகோளுக்கிணங்க திரைப்பட இயக்குனரான மூர்த்தியை தேடி செல்கிறார். தேடச் சொன்னது  அவரது நண்பரான தயாரிப்பாளர் பரசுராம். முதலில் ஆசிரியரின் வேண்டுகோளுக்காக தேட சென்றவள். அவர் தங்கியிருந்த மேன்சன்நண்பர்கள்காதலி என்று பல பேரிடம் விசாரிக்க விசாரிக்க அவர் மேல் மரியாதை கூடுகிறது. மூர்த்தி ஒரு சிறப்பான மனிதர் எனத் தெரிகிறது. பெண்களின் மானத்தை போற்றுகிறவர்,உதவும் மனப்பான்மையுள்ளவர்அவர் ஒரு இயற்கை விரும்பி என்பதையெல்லாம் தெரிந்து கொண்டுஅவர் ஒளிந்து கொண்டு இருக்கும் இடத்தை அடைகிறாள். அவர் தன் பேரை மாற்றிக் கொண்டு இவள் தேடி வந்தவர் தான் இல்லை என்று சொல்கிறார். செல்வியும் அவர் சொல்வதை ஏற்றுக் கொள்வதைப் போல் நடிக்கிறாள். தினமும் அவரை சந்தித்து பேசிஅவரிடம் நேரிடையாக கேட்காமல் அவர் ஒளிந்து கொண்டிருக்கும் காரணத்தை கண்டுபிடிக்கிறாள். ஒரு கட்டத்தில் அவரை சென்னைக்கு அழைத்து வந்து தயாரிப்பாளரிடமும்காதலியிடமும் ஒப்படைக்கிறாள்.

ஒளிந்து கொண்டதற்கான காரணம் என்னவாங்கிப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

இந்த புத்தகத்தை வாங்க அணுக வேண்டிய முகவரி:-

கவிதா பப்ளிகேஷன்

தபால் பெட்டி எண் 6123

8, மாசிலாமணி தெருபாண்டி பஜார்,

தி.நகர்சென்னை – 600017.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை,

 நன்றி:ஆதி வெங்கட்.